20 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் ரஜினி படம்!

அண்ணாமலை, பாட்ஷா என இரண்டு ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் சுரேஷ் கிருஷ்ணா. இவரும், ரஜினியும் 3-வது முறையாக ஒன்றாக இணைந்த திரைப்படம் பாபா.

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம், படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், 20 வருடங்கள் கழித்து, பாபா படம் மீண்டும் திரைக்க வர உள்ளது.

இந்த படத்திற்கு மீண்டும் படத்தொகுப்பு பணி செய்யப்பட்டுள்ளதாகவும் கலர் கிரேடிங், ரீமிக்ஸ் உள்பட பல டிஜிட்டல் அம்சங்கள் இடம்பெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தற்போது வெளியாகும் ’பாபா’ படத்தை பார்த்தால் ரசிகர்களுக்கு புது அனுபவம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இதன்காரணமாக, ரஜினி ரசிகர்கள் கடும் உற்சாகம் அடைந்துள்ளனர்.