பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவர் பாபர் அசாம். அபாரமான பேட்டிங், சிறந்த கேப்டன்சி என்று முன்னிலையில் இருந்த இவர், தற்போது பெரிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். அதாவது, டாக்டர் நிமோ யாதவ் என்பவர், ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், பாகிஸ்தான் அணி வீரரின் காதலியுடன், பாபர் அசாம் ஆபாசமாக நடந்துக் கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டால், உனது காதலன் பாகிஸ்தான் அணியில் தொடர்ந்து இடம்பெறுவார் என்று பாபர் அசாம் கூறியதாகவும், அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
இதனை உறுதிப்படுத்தும் வகையிலான வீடியோக்களையும் அவர் பதிவிட்டுள்ளார். “இந்த வீடியோவில் வருவது அனைத்தும் பொய்.. பாபர் அசாமின் புகழை கெடுக்கவே இவ்வாறு செய்கிறார்கள்” என்று பாபர் அசாமின் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், வீடியோவை பார்த்த நடுநிலை கிரிக்கெட் ரசிகர்கள், பாபர் அசாமிற்கு எதிராகவே, கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.
இது முதல் முறை அல்ல.. இதற்கு முன்பும் பாபர் அசாம் பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளார். பாலியல் துஷ்பிரயோகம், துன்புறுத்தல், மிரட்டல் ஆகியவற்றை பாபர் அசாம் செய்துள்ளதாக, ஹமீசா முக்தார் என்ற பெண் குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.