ரீ ரிலீஸ் ஆகும் ராஜமௌலியின் தரமான திரைப்படம்?

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இவர், நான் ஈ, பாகுபலி, பாகுபலி 2, ரத்தம் ரணம் ரௌத்திரம் என்று பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படம், ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து, சாதனை படைத்துள்ளன. தற்போது, நடிகர் மகேஷ் பாபுவை வைத்து, இண்டியானா ஜோன்ஸ் பாணியிலான படம் ஒன்றை இயக்க உள்ளார்.

இதற்கிடையே, இவர் இயக்கத்தில் உருவான பாகுபலி திரைப்படத்தை, ரீ ரிலீஸ் செய்ய வேண்டும் என்று, ரசிகர்கள் தொடர்ச்சியாக கூறி வந்தனர். ரசிகர்களின் இந்த கோரிக்கையை, படக்குழுவினர் ஏற்றுக் கொண்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, வரும் அக்டோபர் 23-ஆம் தேதி அன்று, பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு, பாகுபலி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம். இதனால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News