பஜாஜ் நிறுவனம் கடன் வழங்க தடை – ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு

இந்தியாவின் முன்னணி கடன் வழங்கும் நிறுவனமாக பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இவர்களுக்கு இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் 2 திட்டங்களின் கீழ் கடன் வழங்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இணையத்தில் கடன் வழங்குவதில் ரிசர்வ் வங்கியின் விதிகளை பின்பற்றாததால் ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 15ம் தேதியான இன்று இந்திய ரிசர்வ் வங்கி,பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் தற்போது நடைமுறையில் வைத்துள்ள eCOM மற்றும் Insta EMI கார்டு திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டுமென தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News