சூர்யாவை டீலில் விட்ட பாலா..! வணங்கான் படத்தின் புதிய அப்டேட்..!

பாலா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாக இருந்த திரைப்படம் வணங்கான். நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர்களது கூட்டணி இணைந்ததால், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. விறுவிறுப்பாக நடந்த வணங்கான் படப்பிடிப்பு, பல்வேறு காரணங்களால் பாதியிலே நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியது.

இந்த நிலையில் மீண்டும் இப்படத்தின் ஹூட்டிங் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சூர்யாவின் கதாபாத்திரத்தில் அருண்விஜய் நடிக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.