சூர்யாவுக்கு பதில் அருண்விஜய்யை தேர்வு செய்த பாலா..!

பாலா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகிய படம் வணங்கான். விறுவிறுப்பாக படபிடிப்பு தொடங்கிய இப்படம், திடீரென இந்த கதைக்கு சூர்யா செட்டாக மாட்டார் எனக் கூறி படத்தை கைவிடிவதாக பாலா அறிவித்தார்.

இருப்பினும் இந்த கதையின் மீது பாலாவிற்கு அதிக அதிக நம்பிக்கை இருப்பதாக திரைவட்டாரங்கள் தெரிவித்து வந்தன. இந்த நிலையில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில், அருண் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்க இருப்பதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.