Connect with us

RajNewsTamil

ஹீரோவாக அறிமுகமாகும் பாலா! ஒளியேற்றிய பிரபல மாஸ் நடிகர்!

சினிமா

ஹீரோவாக அறிமுகமாகும் பாலா! ஒளியேற்றிய பிரபல மாஸ் நடிகர்!

சின்னத்திரையில் காமெடி நடிகராக அறிமுகமானவர் பாலா. வெள்ளித்திரையிலும் ஒருசில படங்களில் நடித்து இவர், மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து, பிரபலம் அடைந்தார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய வாழ்நாள் கனவு, என்னுடைய ரோல் மாடல் மூலம் நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அதாவது, இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ், தன்னை ஹீரோவாக அறிமுகப்படுத்த இருப்பதாகவும், அதனை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை என்றும், பாலா கூறியுள்ளார்.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

More in சினிமா

To Top