Connect with us

Raj News Tamil

பாலாவின் வணங்கான் திரைப்படம் – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

சினிமா

பாலாவின் வணங்கான் திரைப்படம் – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வணங்கான். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாகவும், மிஷ்கின், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தை குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ள இப்படத்தின் டீசர் வரும் 19-ம் தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அருண்விஜய் ,ஒரு கையில் பெரியார் சிலையுடனும் மற்றொரு கையில் விநாயகர் சிலையுடனும் இருந்தார். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top