வண்ண மயமான ராட்சத பலூன் திருவிழா


அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ நகரில் நடைபெற்ற வண்ண மயமான ராட்சத பலூன் திருவிழாவை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
நியூ மெக்ஸிகோவில் உள்ள ஆல்ப்குயூர் நகரில் 50 ஆம் ஆண்டு ராட்சத பலூன் திருவிழா தொடங்கியுள்ளது. மொத்தம் 9 நாட்கள் நடைபெறவுள்ள இந்த திருவிழாவில், 700-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

முதல் நாளில் வானத்தை அலங்கரித்த 600-க்கும் மேற்பட்ட பல்வேறு வடிவங்களிலான ராட்சத பலூன்களை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்ததனர்.

மேலும் அவற்றில் பயணமும் செய்து உற்சாகம் அடைந்தனர்.