கடந்த 2019ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தின் கர்நாடகாவில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ‘மோடி’ பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அவருக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்பளித்தது.
இதனை தொடர்ந்து, தனது 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. ராகுல்காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த பி.ஆர். கவாய் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
உச்சபட்ச தண்டனைக்கான எந்த காரணங்களும் இல்லாததால் தண்டனையை நிறுத்தி வைப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.