சதுரகிரி கோயிலுக்கு செல்ல தடை..பக்தர்கள் ஏமாற்றம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டுக்கு வரும் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை பக்தர்கள் மலை ஏறிச் சென்று தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் இக்கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கனமழை பெய்து வருவதால் சதுரகிரி மலை கோயிலுக்கு செல்லும் வழியில் இருக்கும் காட்டாற்றில் வெள்ளம் ஏற்பட இருக்கிறது. இது தவிர மண் சரிவும் ஏற்படலாம். எனவே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

RELATED ARTICLES

Recent News