நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சில மருத்துவப் பொருட்கள் அடங்கிய பல குளிர் எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கத்தின் மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு தடை விதித்துஉத்தரவிட்டுள்ளது.
குழந்தைகளுக்கு ஏற்படும் பக்கவிளைவுகளை கருத்தில் கொண்டு இந்த மருந்துகளை அரசு தடை செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இருமல் சிரப்களால் உலகளவில் குறைந்தது 141 குழந்தைகள் இறந்ததால் ,அதற்கேற்ப மருந்துகளை குறிப்பிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
எனவே, தற்போது இந்த மருந்துகள் குறித்து கட்டுபாடை பற்றி பலரும் தங்களது கருத்துகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனா்.