வங்கி ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேபோல், பண்டிகைகளில் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் வாரத்தில் 5 நாள் வேலை செய்வது தொடர்பான வங்கி தொழிற்சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கை இந்த வார இறுதியில் நிறைவேறும் என கூறப்படுகிறது.
அதே நேரத்தில் வங்கியில் பணியாற்றுபவர்கள தினசரி வேலை நேரம் 40 நிமிடம் அதிகரிக்கப்பட்டுள்ள்ளது. வங்கியில் பணி செய்பவர்களில் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு அனைத்து வங்கிகளிலும் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் வேலை என்று கேட்டுக்கொண்டு உள்ளது. இது குறித்து ஆலோசனை விரைவில் நடத்த பட உள்ளது.