ECR ல் வைக்கப்பட்ட வினோத பேனர் – இணையத்தில் வைரல்!

புதுவையில் ‘பேனர் தடை சட்டம் 2009’ அமலில் உள்ளது. ஆனால், ஆட்சியாளர்கள் பிறந்தநாளின் போதும், பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போதும் பல்வேறு விதமான கட்வுட்டுகள், பேனர்கள், அலங்கார வளைவுகள் வைக்கப்படுகின்றன.

இதையெல்லாம் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்றும், எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் விலங்கு நல ஆர்வலர் ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேனர் ஒன்றை வைத்துள்ளார். அதில், நாயின் புகைப்படத்துடன், இன்று பிறந்தநாள் விழா காணும் எங்கள் குலதெய்வமே! எங்களின் நம்பிக்கையே! எங்களின் விசுவாசமே! எங்களின் காவலரே! என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. கிழக்கு கடற்கரை சாலையில் நாய்க்கு வைக்கப்பட்ட இந்த பேனர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

RELATED ARTICLES

Recent News