பேட்ஸ்மேன்கள் கூடுதல் பொறுப்பு எடுத்துக்கொள்ளவேண்டும்- ஹர்திக் பாண்ட்யா!

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி கயானாவில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. இதில் திலக் வர்மா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவரில் 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நிகோலஸ் பூரன் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 67 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது .

இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பகிர்ந்துள்ளார் , எங்கள் பேட்டிங் திறனை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. விக்கெட்டுகள் தொடர்ச்சியாக விழுந்தன. நாங்கள் இன்னும் சிறப்பாக பேட்டிங் ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கலாம். 160 அல்லது 170 ரன்கள் சிறந்த ரன்னாக இருந்திருக்கும் . பேட்ஸ்மேன்கள் கூடுதல் பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News