அமைச்சரின் அரவணைப்பில் நடிகை சுகன்யா..! சர்ச்சை நடிகர் வெளியிட்ட தகவல்..!

1991-ம் ஆண்டு தமிழில் வெளியான புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை சுகன்யா. முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்ற இவர் அதே ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான சின்ன கவுண்டர் திரைப்படத்தில்,அவருக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாகவும் உயர்ந்தார்.

பின்னர் பட வாய்ப்புகள் குறையவே,2002-ம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து,2-டே வருடத்தில் கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து செய்துகொண்டார். இந்நிலையில் சர்ச்சைக்குரிய நடிகரும், யூடியூபருமான பயில்வான் ரங்கநாதன் மீண்டும் சர்ச்சைக்குரிய தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

நடிகை சுகன்யா விவாகரத்து பெற்ற பிறகு,அப்போதுஅமைச்சராக இருந்த ஒருவரின் அரவணைப்பில் இருந்தார் என கூறியுள்ளார். அந்நேரத்தில் இச்சம்பவம் சர்ச்சையான நிலையில்,நடிகை சுகன்யாவோ அமைச்சரோ மறுக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். இச்சம்பவம் அவருடைய ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.