தோல்வி அடைந்த ”துணிவு” டிரைலர்..?

அஜித் மற்றும் மஞ்சு வாரியர் முன்னணி கதாபத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் துணிவு. பொங்கலுக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

வங்கி கொள்ளையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டதாக தெரியும் இதனை, பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். மேலும் இப்படத்தின் டிரைலர் வெளியான 24-மணி நேரத்தில் 1.1 மில்லியன் லைக்குகளுடன் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

அதே நேரத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான பீஸ்ட் திரைப்படம், 2.2 மில்லியன் லைக்குகளுடன் 30 மில்லியன் பார்வையாளர்களை பெற்று, துணிவு டிரைலரை முறியடித்துள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள், இருபடங்களையும் ஒப்பிட்டு, அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News