Connect with us

Raj News Tamil

ராணுவம் குறித்து ஆபாச கருத்து.. மீண்டும் வீடியோ வெளியிட்ட மியா கலீஃபா!

உலகம்

ராணுவம் குறித்து ஆபாச கருத்து.. மீண்டும் வீடியோ வெளியிட்ட மியா கலீஃபா!

ஆபாச படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் மியா கலிஃபா. இவர் தற்போது அந்த மாதிரியான படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, சோசியல் மீடியா மாடலாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், இவர் கடந்த ஜூலை மாதம் 2022-ஆம் ஆண்டு அன்று, ஜிவே டாக் என்ற பிரபலமான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டார்.

அப்போது, OnlyFans போன்ற ஆபாச தளங்கள் உள்ளது, பாலியல் தொழில் உள்ளது, நடிப்புத் துறை உள்ளது, இந்த 3 தொழில்களுக்கும் வித்தியாசம் உள்ளதா? அல்லது அவர்கள் அனைவரும், ஒருவகையில், தங்களது உடல்களை விற்பனை செய்கிறார்களா? என்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அவர், “நீங்கள் சொன்ன கூற்றை வைத்து பார்த்தால், ஒன்லி பேன்ஸ் என்ற ஆபாச பட வெப்சைட்டில் பணிபுரிவதை விட, ராணுவத்தில் பணிபுரிவது மிகவும் மோசமானது.

ராணுவ வீரர்கள் தங்களது உடல்களை அரசாங்கத்திற்கு விற்பனை செய்கிறார்கள் என்று கூறியிருந்தார். இந்த கருத்து, அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் காமெடியனான மார்செல்லா ஆர்குயுல்லா ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், ஈராக் போர் குறித்து, சர்ச்சைக்குரிய கருத்து கூறப்பட்டிருந்தது. இதற்கு பதிலடி தரும் வகையில், தனது பழைய சர்ச்சையான வீடியோவை சமூக வலைதளங்களில், மியா கலீஃபா மீண்டும் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ, சமூக வலைதளங்களில், ஆதரவாகவும், எதிராகவும் பலதரப்பட்ட கமெண்ட்ஸ்களை பெற்று வருகிறது.

More in உலகம்

To Top