மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி என்ற கிராமத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க நபராக திகழ்ந்த ஷாஜகான் ஷேக் என்பவரும் அவரது கூட்டாளிகளும் விலை நிலங்களை அபகரித்ததாகவும், பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது.
இந்த புகாரை அடுத்து ஷாஜகான் ஷேக்கை திரிணாமுல் காங்கிரஸ் 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கில் ஷாஜகான் ஷேக் அவரது கூட்டாளிகளுக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் சந்தேஷ்காலி விவகாரத்தில் போராட்டங்களை முன்னெடுத்தவரும், பாஜக-வின் பொதுச்செயலருமான சிரியா பர்வீன் அக்கட்சியில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; சந்தேஷ்காலியில் நடைபெற்ற அனைத்து விரும்பத்தகாத சம்பவங்களும் பாஜக-வால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
சந்தேஷ்காளியில் நடைபெற்ற பல வன்முறை சம்பவங்கள் பாஜக-வால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை என்பதை நிரூபிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.