சில சமயங்களில், கோவிலுக்கு உள்ளே செல்லும்போது, செருப்பை கழட்டிவிட்டு செல்லும் நீங்கள், வெளியே வரும்போது பார்த்தால், அந்த செருப்பு இருக்காது. இந்த பிரச்சனையை, கோவிலுக்கு செல்லும் அனைவரும், ஒருமுறையாவது சந்தித்து இருப்போம்.
இவ்வாறு செருப்பை திருடி செல்லும் நபர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழும். அதற்கு பதில் சொல்லும் விதமாக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது, கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் இரண்டு இளைஞர்கள்.
இவர்கள் இரண்டு பேரும், ஒரு ரிக்ஷாவை எடுத்துக் கொண்டு, கோவில் உள்ள இடங்களில் சுற்றுவார்கள். அந்த கோவிலின் வெளியே இருக்கும் விலை உயர்ந்த காலணிகளை திருடிச் சென்றுவிடுவார்கள்.
பின்னர், அதனை சுத்தம் செய்து, புதியது போல் மாற்றி, புதுச்சேரி, கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தளங்களுக்கு வரும் மக்களுக்கு விற்றுவிடுவார்கள்.
இவ்வாறு, கடந்த 7 வருடங்களில், 10 ஆயிரம் ஜோடி செருப்புகளை திருடியிருக்கிறார்களாம். தற்போது, இவர்களை இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், பொதுமக்கள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.