இன்றைய அதிவேக உலகத்தில், பலரும் தங்களது உணவுகளை சமைத்து சாப்பிடுவதை விட, ஆன்லைனில் ஆர்டர் செய்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.
இவ்வாறு ஆர்டர் செய்யும் உணவுகள், சிலநேரங்களில், அசுத்தமான முறையில் டெலிவரி செய்யப்படும் சம்பவங்கள், அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில், பெங்களூரு மாவட்டத்திலும், இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டத்தை சேர்ந்தவர் தவல் சிங். இவர், உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி ஆப்பில், வெஜிடேபிள் சேலட் ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில், தனக்கு டெலிவரி செய்யப்பட்ட அந்த வெஜிடேபிள் சேலட்டில், உயிருடன் நத்தை ஒன்று நெளிந்துக் கொண்டிருந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அதனை வீடியோவாக எடுத்து, ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இணையத்தில் வெளியான சில மணி நேரங்களிலேயே, அந்த வீடியோ, வைரலாக பரவ ஆரம்பித்துள்ளது.
இதன் தீவிரத்தை உணர்ந்த ஸ்விக்கி நிறுவனம், தவல் சிங்கிற்கு, ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்தது. அதில், உங்களுக்கு நடந்திருப்பது ரொம்ப மோசமான சம்பவம். உங்களது ஆர்டர் ஐடி-யை எங்களுக்கு அனுப்புங்கள். நாங்கள் என்ன பிரச்சனை என்பதை சரிபார்க்கிறோம் என்று கூறியுள்ளது.