Connect with us

Raj News Tamil

“நான் சிகரெட் பிடிச்சா உனக்கென்ன பிரச்சனை” – வைரலாகும் வீடியோ!

இந்தியா

“நான் சிகரெட் பிடிச்சா உனக்கென்ன பிரச்சனை” – வைரலாகும் வீடியோ!

பொது இடங்களில் சிகரெட் பிடிப்பது என்பது, சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. இருப்பினும், ஒருசில நபர்கள் பொது இடங்களில் சிகரெட் பிடித்துக் கொண்டு தான் உள்ளனர்.

இவ்வாறு இருக்க, ஆட்டோவில் அமர்ந்துக் கொண்டு, வாடிக்கையாளர் சிகரெட் பிடித்த வீடியோ, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. அதாவது,

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் ஷேக் மொயின். இவர், ஜே.பி. நகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவில் பயணித்த இளைஞர் ஒருவர், சிகரெட் புகைத்துள்ளார்.

இந்நிலையில், அந்த இளைஞர் சிகரெட் புகைக்கும்போது, அந்த சிகரெட் துண்டு, ஷேக்கின் காலில் பட்டு, காயம் ஏற்பட்டதாக, கூறப்படுகிறது. மேலும், அந்த ஆட்டோ ஓட்டுநரும், தாருமாறாக வாகனத்தை ஓட்டி, ஷேக்கின் இருசக்கர வாகனத்தையும் இடித்துள்ளாராம்.

இதனால் கோபம் அடைந்த அவர், அந்த ஆட்டோவை சேஸ் செய்து, சிகரெட் புகைத்த இளைஞரிடம் கேட்டுள்ளார். அப்போது, நான் ஆட்டோவில் சிகரெட் பிடித்தால், உனக்கு என்ன பிரச்சனை? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், நாங்கள் நேரடியாகவே காவல்துறையினரிடம் பேசிக் கொள்கிறோம். நீ ஏற்கனவே, ஆட்டோவின் பதிவு எண் வீடியோ எடுத்திட்டல்ல. தயவு செஞ்சு, நேரடியாக போலீஸ் கிட்ட போய் பேசு” என்று சிகரெட் புகைத்தவர் பேசியுள்ளார்.

இதுதொடர்பான வீடியோவை, ஷேக் மொயின் இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. இவ்வாறு வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இது பெங்களூரு நகர காவல்துறையினர் கவனத்திற்கு சென்றுள்ளது.

அவர்கள் அந்த பதிவுக்கு அளித்துள்ள பதிலில், “ இந்த வீடியோ Note செய்யப்பட்டது. இதுசம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு நாங்கள் தகவல் தெரிவித்துவிட்டோம்” என்று கூறியுள்ளனர்.

More in இந்தியா

To Top