Connect with us

Raj News Tamil

இஸ்லாமியர்கள் குறித்த சர்ச்சை வீடியோ…கர்நாடக பாஜக ஐடி பிரிவு தலைவர் கைது

அரசியல்

இஸ்லாமியர்கள் குறித்த சர்ச்சை வீடியோ…கர்நாடக பாஜக ஐடி பிரிவு தலைவர் கைது

கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் அனிமேஷன் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில், ‛‛காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியி்ல எஸ்சி, எஸ்டி மற்றும் ஒபிசி பிரிவினருக்கான நிதி, சொத்துகளை இஸ்லாமியர்களுக்கு வழங்கவதாக கூறி உள்ளது” என்பதை குறிக்கும் வகையிலான காட்சிகள் இருந்தன.

இது தொடர்பாக கர்நாடகா காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து பெங்களூர் ஹைகிரவுண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தான் கர்நாடகா சமூக வலைதள பிரிவு கன்வீனர் பிரசாந்த் மகனூரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவுரையின்படி அந்த கட்சியின் ஐடி விங்க் பொறுப்பாளர் அமித் மாளவியா இந்த அனிமேஷன் வீடியோ வெளியிடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, அமித் மாளவியா உள்ளிட்டோருக்கு ஹைகிரவுண்ட் போலீசார் சம்மன் அனுப்பினர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in அரசியல்

To Top