ஆன்லைனில் ஆர்டர் செய்த சிக்கன் ஃப்ரைடு ரைஸில் கரப்பான் பூச்சி..!!

பெங்களூருவை சேர்ந்த ஹர்ஷிதா என்ற பெண் ஆன்லைன் டெலிவரி தளமான Zomatoவில் சிக்கன் ஃப்ரைடு ஆர்டர் செய்துள்ளார். அந்த உணவில் கரப்பான் பூச்சி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து அவர் தனது X வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “நான் சொமாட்டோவில் சிக்கன் ஃப்ரைடு ரைஸை “டாப்ரி பை தி கார்னர்” என்ற உணவகத்தில் இருந்து ஆர்டர் செய்தேன். என் உணவில் கரப்பான் பூச்சி இருந்தது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்கு உடனடி தீர்வு வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News