லாரன்ஸ்-க்கு வில்லனாக நடிக்கும் பிரபல நடிகர்?

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், பென்ஸ் என்ற பெயரில் திரைப்படம் ஒன்று உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ராகவா லாரன்ஸ் நடிக்கும் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி, பல நாட்கள் ஆகியும், படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமலே இருந்து வருகிறது. இதனால், படம் கைவிடப்பட்டதா என்ற கேள்வியும், ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது.

இந்நிலையில், இதற்கான காரணம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு, நடிகர் மாதவனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாம்.

அவரும் நடிப்பதற்கு ஓகே சொல்லிவிட்டாராம். எனவே, மாதவனின் கால்ஷீட் கிடைத்த பிறகு, படத்தை தொடங்குவதற்கு, முடிவு செய்யப்பட்டுள்ளதாம். மேலும், மாதவன் நடிக்க உள்ள கதாபாத்திரம், வில்லனாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News