பாரதி கண்ணம்மா நடிகரின் மனைவி மரணம்!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகர் பரத் கல்யாண். இவருக்கு பிரியா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

பிரியாவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கடந்த பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி கோமா நிலைக்கு சென்றதால், கடந்த 7 மாதங்களாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணிக்கு பிரியா உயிரிழந்துள்ளதாக, அவரது குடும்பத்தினர் பகிர்ந்துள்ளனர். இவரது மறைவை அறிந்த திரையுலகினர், ரசிகர்கள் அவருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.