வாத்தி படத்தின் மூலம், முதன்முறையாக நேரடி தெலுங்கு படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இந்த படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதற்கிடையே, இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி, பாரதி ராஜா உட்பட பலர் கலந்துக் கொண்டு, ரசிகர்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய இயக்குநர் பாரதி ராஜா, வாத்தி படத்தின் நாயகி சம்யுக்தாவை, காதலிப்பதாக கூறினார்.
மேலும், சம்யுக்தாவை பார்க்கும் போது, கொஞ்சம் தாமதமாக பிறந்திருக்கலாம் என தோன்றுகிறது என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இப்போதும் சம்யுக்தாவை காதலிக்கிறேன் என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார்.