Connect with us

Raj News Tamil

அஜித்துக்கு மட்டுமே உண்டான சிறப்பு! உங்களுக்கு தெரியுமா? கொண்டாடும் ரசிகர்கள்!

சினிமா

அஜித்துக்கு மட்டுமே உண்டான சிறப்பு! உங்களுக்கு தெரியுமா? கொண்டாடும் ரசிகர்கள்!

அஜித் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான திரைப்படம் வேதாளம். பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், தற்போது தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

போலா சங்கர் என்ற பெயரில் உருவாகியுள்ள இப்படத்தில், சிரஞ்சீவி நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம், பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள், அஜித் நடித்துள்ள கதாபாத்திரத்தில் வேறு யாராலும், மிகவும் சிறப்பாக நடிக்க முடியாது என்று கூறி வருகின்றனர்.

அந்த கதாபாத்திரத்தில் வேறு யாரு நடித்தாலும், அப்படம் தோல்வியை தான் அடையும் என்று கூறி வருகின்றனர்.

இதேபோல், அஜித்தின் வீரம் இந்தி ரீமேக்கும் தோல்வி அடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top