உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஐஷ்பாக் பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞருக்கும், 19 வயது பெண்ணுக்கும், சில மாதங்களுக்கு முன்பு, திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி அன்று, திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடியினர் இருவரும், வீடியோ காலில் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது, அந்த இளைஞர் கூறியதன் அடிப்படையில், அந்த பெண் நிர்வாணமாக, இருந்துள்ளார்.
இதனை அந்த இளைஞரும், ஸ்க்ரீன் ரெக்கார்டிங் மூலம், பதிவு செய்துக் கொண்டுள்ளார். இவ்வாறு இருக்க, கடந்த திங்கள் கிழமை அன்று, அந்த பெண் வேறொரு இளைஞருடன் வீட்டை விட்டு ஓடிப்போயுள்ளார்.
இருவரும், செவ்வாய் கிழமை அன்று, திருமணமும் செய்துக் கொண்டுள்ளனர். அப்பெண்ணுக்கு முதலில் நிச்சயிக்கப்பட்டிருந்த இளைஞர், இந்த தகவலை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதன்காரணமாக கடுங்கோபம் அடைந்த அவர், பிப்ரவரி மாதம் ஸ்க்ரீன் ரெக்கார்டு செய்த ஆபாச வீடியோவை, அந்த பெண்ணின் கணவருக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர், இதுகுறித்து தனது தாய் மற்றும் சகோதரரிடம் பேசியுள்ளார்.
அதற்கு, அந்த பெண்ணை பழிவாங்கும் நோக்கத்தில், அவர்கள் இரண்டு பேரும், வீடியோவை இணையத்தில் வெளியிடும்படி கூறியுள்ளனர். அவரும் அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டதையடுத்து, அது வைரலாக பரவி வந்துள்ளது.
இந்த வீடியோ குறித்து அறிந்த பெண், காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த அவர்கள், பெண்ணின் கணவர், அவரது தாய் மற்றும் சகோதர், மற்றும் வீடியோவை கணவருக்கு அனுப்பி வைத்த இளைஞரை கைது செய்தனர். மனைவியின் ஆபாச வீடியோவை, கணவனே இணையத்தில் வெளியிட்ட சம்பவம், பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.