டாட்டா குழுமத்தின் மிகப்பெரிய அறிவிப்பு!

டாட்டா கன்சல்டன்ஸி நிறுவன மருத்துவரின் சான்றிதழ் பெற்றவர்களே வீட்டில் இருந்து பணி செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டாட்டா கன்சல்டன்ஸி கணினி நிறுவன ஊழியர்கள், கொரோனா பாதிப்பு காலக்கட்டத்திலிருந்து வீட்டில் இருந்தே பணி செய்து வருகின்றனர்.

கொரோனா முடிவுக்கு வந்த பிறகு, அலுவலகத்திற்கு நேரில் வந்து பணி செய்ய இயலாத வகையில் உடல்நல பாதிப்பு உடையவர்கள் மட்டும் வீட்டில் இருந்தே பணி செய்ய நிர்வாகம் அனுமதித்திருந்தது. அதற்கான மருத்துவ சான்றிதழ்களை ஊழியர்கள் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், டிசிஎஸ் நிறுவனத்தின் மருத்துவர்கள் பரிந்துரை செய்த சான்றிதழ்களை பெற்றவர்கள் மட்டுமே வீட்டில் இருந்தே பணி செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பா
மனதவள மேம்பாட்டு பிரிவினர், அனைத்து டீம் மேலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். வீட்டில் இருந்தே பணி செய்வதை ஊக்கப்படுத்த முடியாது என்றும், அலுவலகத்தில் நேரில் வந்து பணிபுரிவதே மேம்பாட்டிற்கான செயல்பாடாக இருக்க முடியும் என்றும், நிர்வாகம் தெரிவித்துள்ளது.