பிக்-பாஸ் போட்டியாளர்களின் முழு லிஸ்ட் இதோ!

பிக்-பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் எந்தெந்த பிரபலங்கள் கலந்துக் கொள்ள இருக்கிறார்கள் என்ற ஆர்வம், பொதுமக்கள் மத்தியில், அந்த நிகழ்ச்சியின் ரசிகர்கள் மத்தியிலும் இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள இருக்கும் பிரபலங்களின் விவரங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி, டிக்-டாக் செயலியின் மூலம் பிரபலம் அடைந்த ஜி.பி முத்து இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள உள்ளாராம். அடுத்ததாக, விஜய், சிம்பு உள்ளிட்டோரின் படங்களில் நடன இயக்குநராக பணியாற்றிய ராபர்ட் மாஸ்டர் கலந்துக் கொள்ள உள்ளாராம்.

சின்னத்திரை காமெடி கலைஞராக இருந்து வரும், அமுதவாணன் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள உள்ளார். ஏராளமான சுயதீன பாடல்களை பாடி பிரபலம் அடைந்த அசல் கொலார் என்ற பாடகரும், பிக்-பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள உள்ளார். இவரை அடுத்து, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் உடன்பிறந்த சகோதரரான மணிகண்டன் இந்த நிகழ்ச்சியில், கலந்துக் கொள்ள உள்ளார்.

இவர்களை தொடர்ந்து, விஜே மகேஸ்வரி, பாடகி ராஜேஷ்வரி, ஏடிகே என்ற பாப் பாடகர் ஆகியோரும் கலந்துக் கொள்ள உள்ளனர். மேலும், சென்ற சீசனில் நமிதா என்ற திருநங்கை போட்டியாளராக கலந்துக் கொண்டதைப் போல், இம்முறை ஷிவின் கணேசன் என்ற திருநங்கை கலந்துக் கொள்ள உள்ளாராம்.

இவர்கள் மட்டுமின்றி, வேறு சில பிரபலங்களும் கலந்துக் கொள்ள உள்ளார்கள்.. போட்டியாளர்களின் லிஸ்டை பார்க்கும்போது, பரபரப்புக்கும், பொழுதுபோக்கிற்கும் பஞ்சம் இருக்காது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.