”வாரிசு” இசை வெளியீட்டில் ஜாக்பாட் அடித்த பிக்பாஸ் பிரபலம்..!

விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. பொங்களுக்கு வெளியாகவுள்ள இப்படத்தின், இறுதிகட்ட படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மேலும் படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர்-24 ஆம் தேதி பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளன.

இதற்கான விழா மேடை அமைக்கும் பணி விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவை பிக் பாஸ் டைடல் வின்னர் ராஜூ மோகன் தொகுத்து வழங்குவதாக தகவல் பரவியுள்ளது.

இதனை உறுதிபடுத்தும் விதமாக தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ராஜூவுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.