பிஹார்: கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி!

பிஹார் மாநிலம் ஜெஹனாபாத் மாவட்டத்தில் பராவர் மலைப்பகுதியில் உள்ள பாபா சித்தேஸ்வரா நாத் கோயிலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த திருவிழாவுக்காக பக்தர்கள் ஏராளமானோர் நள்ளிரவு முதலே குவிந்திருந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 3 பெண்கள் உட்பட 7 பேர் பலியாகினர். 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காயமடைந்த பக்தர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் சிலரது நிலைமை மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர்.

RELATED ARTICLES

Recent News