ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், கோரிக்கை வைத்து வருகின்றனர். இதன்மூலம் எந்த சாதியினருக்கு, எந்த அளவில் இடஒதுக்கீடு வழங்கலாம் என்றும், அவர்களின் முன்னேற்றத்திற்கு என்ன திட்டங்கள் வகுக்கலாம் என்றும், கருத்து கூறப்பட்டு வருகிறது.
ஆனால், இன்னும் இந்தியாவில் எந்தவொரு மாநிலங்களிலும், சாதிவாரி கணக்கெடுப்பு துவங்கப்படவில்லை. இந்நிலையில், இந்தியாவிலேயே முதன்முறையாக, பீகார் மாநிலத்தில், ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த , அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அம்மாநிலத்தில் மக்களிடம், 17 தலைப்புகளின் கீழ் கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு கேள்விகள் கேட்கப்பட்டு வரும்போது, கணவர் பெயர் என்ன? என்ற கேள்விக்கு 40-க்கும் மேற்பட்ட பெண்கள், ரூப் சந்த் என்ற ஒரே நபரின் பெயரை வழங்கியுள்ளனர். மேலும், வேறு சில குழந்தைகள், தங்களது தந்தை பெயர் என்ன? என்று கேட்டதற்கு, ரூப் சந்த் என்றே கூறியுள்ளனர்.
ஆனால், அதன்பிறகே விஷயம் என்னவென்று தெரியவந்துள்ளது. அதாவது, அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்துவதற்கு சென்ற இடத்தில், பாலியல் தொழில் தான் அதிகமாக நடத்தப்பட்டு வருகிறதாம். அந்த பகுதியில், பாலியல் தொழிலாளிகள் தான் அதிகம் வசித்து வருகிறார்களாம்.
அவர்கள் அனைவருக்கும் பணம் எல்லாவற்றுக்கும் மேலாக இருந்து வருகிறது. அதாவது, ரூப் சந்த் என்பதற்கு அர்த்தம் பணம் தருபவராம்.. மற்றும் பணம் என்று வேறொரு அர்த்தமும் உள்ளதாம். பணத்தை தருபவர் அல்லது பணம் தான் தங்களின் கணவர் மற்றும் தந்தை என்று அங்கிருக்கும் பெண்களும், குழந்தைகளும் கூறி வருகின்றனர்.