பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் உள்ள மதுரா பகுதியில், மருத்துவராக பணியாற்றி வந்த பெண் ஒருவர், அப்பகுதி கவுன்சிலரை காதலித்து வந்துள்ளார். இருவரும் 2 வருடங்களாக, தீவிரமாக காதலித்து வந்த நிலையில், நேற்று பதிவு திருமணம் செய்துக் கொள்ள முடிவு எடுத்தனர்.
ஆனால், கவுன்சிலர் பிரகாஷ், பதிவு திருமணம் செய்துக் கொள்ள மறுப்பு தெரிவித்து, திடீரென பின்வாங்கியுள்ளார். இதனால் கடுப்பான அந்த பெண் மருத்துவர், பிரகாஷை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார்.
அங்கு, அவரை கடுமையாக தாக்கிவிட்டு, பிறப்புறுப்பை வெட்டியுள்ளார். இந்த தாக்குதலில் பிரகாஷ் கதறியுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
தற்போது, கவுன்சிலர் பிரகாஷ், பாட்னாவில் உள்ள ஸ்ரீஷ்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த பெண் மருத்துவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். பதிவு திருமணம் செய்ய காதலனின் பிறப்புறுப்பை, காதலி வெட்டியுள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.