பெண்களை தேடிச் சென்று, அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, கொலை செய்யும் சைக்கோ கொலைக்காரர்கள் பலரை, நாம் பார்த்திருப்போம். ஆனால், பெண்களை தேடிச் சென்று, அவர்களுக்கு லிப்-கிஸ் கொடுத்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் செல்லும் சைக்கோவை பார்த்திருக்கிறீர்களா? அப்படியான சம்பவம் ஒன்று தற்போது நடந்துள்ளது.
அதாவது, பீகார் மாநிலம் ஜாமுய் மாவட்டத்தில் உள்ள சதார் மருத்துவமனையின் வெளியே, நடுத்தர வயது பெண் ஒருவர், செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், அந்த பெண்ணுக்கு உதட்டோடு உதடு வைத்து, முத்தம் கொடுத்துவிட்டு, அங்கிருந்து கிளம்பி சென்றார்.
இதையடுத்து, அந்த பெண், காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் , வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த, விசாரணை நடத்தி வந்தனர்.
அதன்பிறகு தான், இதேபோன்ற புகார், பீகார் மாநிலம் முழுவதும் உள்ள காவல்நிலையங்களில் பதிவாகியிருப்பது தெரியவந்தது. இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், அந்த சிசிடிவி காட்சியில் கிடைத்த அவனது முகத்தை பயன்படுத்தி, தீவிரமாக தேடி வருகின்றனர்.