பீகார் ரயில் விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

பிஹார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையத்துக்கு அருகே வடகிழக்கு எக்ஸ்பிரஸ் நேற்று இரவு 9.35 மணி அளவில் ரயிலின் 21 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

உடனடியாக சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை, ரயில்வே காவலர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இந்த சம்பவத்தில் 5 பேர் பலியாகினர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பிஹார் அரசு தரப்பில் பக்சர் மாவட்ட ஆட்சியர், பேரிடர் மேலாண்மைத் துறை, சுகாதாரத் துறை, பக்சர் மற்றும் போஜ்பூர் மாவட்ட அதிகாரிகளிடம் விபத்து நடைபெற்ற இடத்தில் துரிதமாக செயல்பட அறிவுறுத்தி உள்ளதாக அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்து எக்ஸ் தளத்தில் தகவல் வெளியிட்டுள்ள ரயில்வே அமைச்சர், “விபத்து நடைபெற்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும். மீட்புப் பணிகள் முடிவடைந்தது. மாற்று ரயில் மூலம் பயணிகள் காமாக்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.” எனத் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News