ரயில் தண்டவாளத்தை திருடிய பலே திருடர்கள்..! பீகாரில் நடந்த பகீர் சம்பவம்

பீகாரில் சில மாதங்களுக்கு முன்பு ரயில் இன்ஜின் திருடப்பட்ட நிலையில், தற்போது ரயில் தண்டவாளங்களும் திருடு போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு கர்காரா என்ற பகுதியில் பழுதுபார்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலின் இன்ஜினை ஒரு கும்பல் திருடி சென்று அதனை கடையில் விற்றனர்.

இந்நிலையில் பீகாரில் மேலும் ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. சமஸ்டிபூர் ரயில்வே கோட்டத்தில் பந்தவூல் என்ற ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் பாதையில் போக்குவரத்து ஏதும் இல்லாமல் இருந்துள்ளது.

சுமார் இரண்டு கி.மீ தூரம் கொண்ட இந்த ரயில் பாதையில் உள்ள தண்டவாளங்களை ஒரு மர்ம கும்பல் திருடி விற்றுள்ளது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த ரயில்வே நிர்வாகம் ரயில்வே பாதுகாப்பு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து துறைசார்ந்த விசாரணைக்கு உத்தரவு விடுத்துள்ளது.

RELATED ARTICLES

Recent News