மீண்டும் பைக் பயணம் – விடாமுயற்சி ஊ ஊ உ தான்..!

கடந்த ஆகஸ்ட் மாதம், ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார். இதையடுத்து விடா முயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் அஜித்தின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, மறுபடியும் தனது BMW பைக்கை எடுத்து கொண்டு அரபு நாடுகளில் ஒன்றான ஓமன்னுக்கு ட்ரிப் சென்றுள்ளார் அஜித். அங்குள்ள ரசிகர் ஒருவர் அஜித்துக்கு “ஹேப்பி ஜார்னி அஜித் சார்” என்கிறார். அதற்கு அஜித்தும் சியர்ஸ் சொல்கிறார்.

இந்த வீடீயோவை பார்த்த அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்க வாய்ப்பே இல்லையா? என ஏமாற்றத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News