ராஜஸ்தானில் முதன்முறையாக திருநங்கைக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் கிரேட்டர் முனிசிபல் கார்ப்பரேஷன் மூலம் திருநங்கை நூர் ஷெகாவத்துக்கு, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் இயக்குநரும், தலைமைப் பதிவாளருமான (பிறப்பு மற்றும் இறப்பு) பன்வர்லால் பைர்வா பிறப்புச் சான்றிதழ் வழங்கினார்.
பின்னர் பேசிய பன்வர்லால் பைர்வா: “ஆண் மற்றும் பெண் பிறப்பு பதிவுகளுடன், திருநங்கைகளின் பிறப்பு பதிவுகளும் இனி மாநகராட்சி போர்ட்டலில் கிடைக்கும்”.
“திருநங்கைகள் தங்கள் பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வுத் திட்டமும் தொடங்கப்படும்” என்றார்.