Connect with us

Raj News Tamil

பைசன் படத்தின் அப்டேட் தந்த மாரி செல்வராஜ்!

சினிமா

பைசன் படத்தின் அப்டேட் தந்த மாரி செல்வராஜ்!

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர் மாரி செல்வராஜ். இவர் தற்போது, நடிகர் துருவ் விக்ரமை வைத்து, பைசன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

கபடி விளையாட்டு வீரரை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இப்படம் தொடர்பான அப்டேட்டை, இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார்.

அதாவது, இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுவிட்டதாக, மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.

பொதுவாக மிகவும் மந்தமான முறையிலேயே படப்பிடிப்பை நடத்தும் மாரி செல்வராஜ், தற்போது இவ்வளவு வேகமாக படப்பிடிப்பை முடித்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

More in சினிமா

To Top