சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவா் நடிகை பிரியங்கா மோகன். தற்போது இவா் தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 68’ படத்தில் பிரியங்கா மோகன் தான் கதாநாயகி என்ற தகவலும் கிசுகிசுக்கப்படுகிறது.
இந்நிலையில் பல்வேறு படங்களில் கமிட் ஆகியுள்ள இவா்
தற்போது நானி நடிக்க உள்ள 31-வது திரைப்படத்தின் நாயகி பிரியங்கா மோகன் தான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் பூஜை 24 ஆம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தஅறிவிப்பை பிரியங்கா மோகன் ரசிகா்கள் ஷோ் செய்து கொண்டாடி வருகின்றனா்.