காங்கிரசுக்கு தாவும் பாஜக கூட்டணி கட்சிகள்? ஜெய்ராம் ரமேஷ் கொடுத்த முக்கிய தகவல்

கடந்த 2019ஆம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. இறுதி கட்ட தேர்தல் வரும் ஜூன் 1ம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் 4ம் தேதி வெளியாக உள்ளது.

இதற்கான பிரசாரங்கள் இன்றுடன் நிறைவடைகின்றன. இதில் உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் மிகுந்த கவனம் பெற்றுள்ளன. இந்தியா கூட்டணி சார்பில் இதுவரை பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்பட்வில்லை. பாஜக இதனை கடும் விமர்சனமாக கையில் எடுத்திருக்கிறது.

இப்படி இருக்கையில், இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் 48 மணி நேரத்தில் பிரதமர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

இந்தியா கூட்டணி தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களை கடந்து வெற்றி பெறும். வெற்றி பெற்றவுடன் அடுத்த 48 மணி நேரத்தில் பிரதமரை தேர்ந்தெடுப்போம். அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்ற கட்சி தலைமைக்கு உரிமை கோர வாய்ப்பு இருக்கிறது.

இந்தியா கூட்டணி வெற்றி பெறும் போது, என்டிஏ கூட்டணியிலிருந்து சில கட்சிகள் எங்களுடன் சேர வாய்ப்பு உள்ளது. அப்போது அது குறித்து காங்கிரஸ் தலைமைதான் முடிவு செய்யும்” என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News