மிக சிறப்பான பட்ஜெட் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பெரும் எதிர்ரபார்ப்புக்கு மத்தியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

இன்று மோடி அரசு 3.0 ல் முதல் நதி பட்ஜெட் அறிவித்து சாதனையை படைத்துள்ளது. 10 ஆண்டுகள் போடப்பட்ட பட்ஜட் முடிக்கப்பட்டு அடுத்த 5 ஆண்டுகளுக்கு கொண்டு சென்றுள்ளது.

தனிநபர் வரி மாற்றியுள்ளதின் படி சகோதர சகோதரிகளுக்கு பண சேமிப்பு புதிய அறிவிப்பின் படி நடக்கும். பெண்கள் குழந்தைகளுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் ஒதிக்கியுள்ளது இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமானது.

ஒரு கோடி இளைஞர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் தலை சிறந்த கம்பெனிகளில் பணிபுரிய உள்ளனர். சென்னை உட்பட 14 பெரிய நகரங்களுக்கு சிறப்பு பட்ஜெட் கொடுத்துள்ளது வரவேற்க்கதக்கது.

1 கோடி வீடுகள் நகர பகுதிகளில் உள்ள ஏழைகளுக்கு வர இருப்பதும் வரவேற்க்கதக்கது. மிக சிறப்பான பட்ஜட் மோடி அரசு நமக்கு அளித்த உள்ளார்கள்.

அமராவதியில் புதிய நகரத்தை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதை புதிதாக கொண்டுவரப்பட்ட அமராவதியை மேம்படுத்துவதாக தான் கருதுகிறேன். இன்னும் இருதினங்களில் வேறு எந்தெந்த நகரம் என்பது தெரிய வரும்

காங்கிரஸ் கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க., தேர்தல் அறிக்கையில் வளர்ச்சி வளர்ச்சி என்று தான் இருந்துள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இலவசம் இலவசம் என்று தான் இருந்துள்ளது. தற்போதைய பட்ஜெட் வளர்ச்சியை நோக்கி உள்ளது என அவர் பேட்டியளித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News