சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இதில், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000, தகுதியான குடும்பத்தலைவிகளுக்கு இந்த நிதியாண்டு முதல் வழங்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். அண்ணாவின் பிறந்தநாளான செப். 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பட்ஜெட் குறித்து கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்குப் பிறகு, ‘மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி. வரும் செப்டம்பர் மாதம் இந்த தொகை வழங்கப்படும்போது, முதல் தவணையில் இதுவரையிலான 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து,29000 ரூபாயாக வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
அதோடு தகுதியுடைய மகளிருக்கே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மடைமாற்றாமல்,தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.” என அதில் கூறியுள்ளார்.
ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்குப் பிறகு, ‘மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி.
— K.Annamalai (@annamalai_k) March 20, 2023
வரும் செப்டம்பர் மாதம் இந்த தொகை வழங்கப்படும்போது, முதல் தவணையில் இதுவரையிலான 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து, (1/2)