திமுக அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினர் கைது..!

அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி தரும் விதமாக பாஜக மாநில துணைத்தலைவரான சசிகலா நாக்கு இருக்காது, கால் இருக்காது என பேசி அவரும் சர்ச்சையில் சிக்கினார்.

இதையடுத்து சசிகலா புஷ்பாவின் வீடு, கார் மீது சிலர் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். சிகலா புஷ்பாவின் வீடு தாக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் அமைச்சர் கீதா ஜீவன் வீட்டை முற்றுகையிட முயன்றனர். வீட்டை முற்றுகையிட்டால், கைது நடவடிக்கை எடுக்கப்டும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து பாஜகவினர் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.