நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் நடந்து வந்த மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ளது. இதில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது. அதன் படி தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில், இந்தியா கூட்டணி 33-37 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணி 2 – 4 இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அதிமுக கூட்டணி 0-2 இடங்களை மட்டுமே பிடிக்கக்கூடும் என இந்தியா டுடே வெளியிட்டுள்ள கணிப்பு தெரிவிக்கிறது. இந்த கருத்துக்கணிப்பு அதிமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.