சவுண்டெல்லாம் விடாத…பறக்கும் படை அதிகாரியை மிரட்டிய பாஜக வேட்பாளர்!

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திருப்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் ஏ.பி.முருகானந்தம் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இந்நிலையில் இன்று காலை பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் பிரச்சாரத்திற்காக தனது காரில் கோபிசெட்டிபாளையம் சென்று விட்டு, திரும்ப வரும் வழியில் பறக்கும் படை அதிகாரிகள் அவரது காரை நிறுத்தி சோதனையிட முயன்றுள்ளனர். அப்போது அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஏ.பி.முருகானந்தம், கண்காணிப்பு நிலை குழுவினரிடம், ”நீங்கள் யார்? எதற்காக பேசுகிறீர்கள்? சவுண்டெல்லாம் விடாதீங்க. வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு அலைய வைத்து விடுவேன்” என்று விரல்களை நீட்டி மிரட்டும் தொனியில் குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து அதிகாரிகளுடன் முருகானந்தம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News