கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ஆண்டாள் முள்ளிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் துரை ராமலிங்கம். கடலூர் மாவட்ட பா.ஜ.க. துணைத்தலைவரான இவர் கோவையில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக பரப்புரை செய்ய கோவை சென்றார்.
நேற்று மாலை பிரச்சாரம் முடிந்த பிறகு கோவை தொகுதியில் அண்ணாமலை தான் வெற்றி பெற வேண்டும் என்று கூறியவாறு கத்தியை எடுத்து இடது கை ஆள்காட்டி விரலை திடீரென துண்டித்து கொண்டார்.
இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு கோவை அவினாசி சாலையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இது குறித்து அவர் கூறியதாவது : 10 நாட்களுக்கு முன்பு கோவை வந்து அண்ணாமலைக்கு ஆதரவு திரட்டி பிரசாரம் செய்தேன். அருகில் இருந்தவர்கள் அவர் தோல்வியை சந்திப்பார் என்று கூறினர். இது எனக்கு வேதனையை கொடுத்தது. இதனால் தான் அண்ணாமலை வெற்றி பெற வேண்டி கைவிரலை துண்டித்தேன் என அவர் கூறியுள்ளார்.