டிஜிபி அலுவலகத்தில் ஆர் எஸ் பாரதி மீது பாஜக புகார்

சமீபத்தில் திமுக பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பாஜகவினரை கண்டிக்கும் விதமாக திமுகவினர் மீது கை வைத்தால் பாஜகவினர் உயிரோடு நடமாட முடியாது என பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஆர் எஸ் பாரதி பேசியது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி பாஜகவின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதத்திலும் பாஜகவினரை தூண்டும் விதத்திலும் பேசியதாக ஆர் எஸ் பாரதி மீது வழக்கு பதிவு செய்ய புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் ஜி எஸ் மணி,

திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நேரடி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். திமுக – பாஜக நிர்வாகிகள் மட்டும் உறுப்பினர்கள் மோதலில் ஈடுபடுகின்ற வகையில் ஒரு அசாதாரண சூழ்நிலை உருவாக தீய எண்ணத்தோடு திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கட்சி நிகழ்ச்சியில் பேசி இருந்தார்.

அந்த பேச்சானது சமூக வலைத்தளங்களில் பத்திரிகைகளில் பெரிய செய்தியாக வந்து அசாதாரண சூழ்நிலை ஏற்படுத்தி உள்ளது. எனவே அவர் மீது சைபர் கிரிமினல் வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்றைய தினமே சைபர் கிரைமிற்கு புகார் அளிக்கப்பட்டு அதற்கான ஆவணங்களும் ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டது.

திமுக மீது கை வைத்தால் ஒருவர் கூட பாஜக கட்சியில் உயிரோடு இருக்க மாட்டார் என மோசமான வார்த்தைகளை கூறி அரசியல் நாகரீகத்தை மீறி இரு பிரிவினர் இடையே மோதலையும் வெறிப்புணர்வையும் அச்சுறுத்தலையும் உருவாக்கும் வகையில் பேசியிருக்கிறார்.

தற்போது டிஜிபி அலுவலகத்தில் இது குறித்து புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதுபோன்று பேசுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்தால்தான் மக்களின் ஆட்சி என நம்பப்படும் என தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News